முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்

வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப் படுகின்ற வினாயகரின் பெயரால் - கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

எளிமைக்குப் பெயர் பெற்ற கடவுளாகச் சொல்லப் படும் இவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவ்ர்களின் தரிசனத்துக்கு எட்டாத 'வந்தேறி'தெய்வங்களை போன்றவர் அல்ல. 'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகர், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போது. அதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கா எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்வைத்து இந்த ஆண்டு சங்பரிவார் தனது கலவரத் திட்டத்தை - முத்துப்பேட்டை, திருவிதாங்கோட்டை, தக்கலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது. ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்' பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோ' முறையோ' என்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.

ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா? டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை 'வீடியோ' மூலம் படம்பிடிக்க வேண்டும்.
  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறை, பொருள் நஷடம், உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும். கடமையைச் செய்ய காவல் துறை தவறினால், மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

32 பின்னூட்டங்கள்:

Kamal said...

இங்கு மும்பையில் வருடாவருடம் "லால்பாக் ராஜா" என்று அனைவராலும் கொண்டாடப்படும் விநாயகர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் "முகம்மது அலி ரோடு" வழியாக தான் செல்கிறார்...அவருக்கு முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் பெரும் வரவேற்பு கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கிறார்கள் :))) இது பல ஆண்டுகளாக தொடர்ந்து எவ்வித பிரச்சனைகள் இன்றி நடந்து வருகிறது..... :))
இது போல எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும்...மக்களுக்கு சகிப்புத்தன்மை வரவேண்டும்...எப்போது வருமோ???

Robin said...

//ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.//விநாயகர் மட்டுமல்ல ராமரும் இந்த லிஸ்டில் உண்டு.

Anonymous said...

சமூக அக்கறையுள்ள பதிவு. நன்றி.

பிறைநதிபுரத்தான் said...

கமால் காந்த், வருகைக்கு நன்றி.
வினாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பதட்டம் எற்பட - அது கலவரமாக மாற காரணம் என்ன என்ற அல்சல்தான் இப்பதிவின் முக்கியச் சாரம்.

மும்பை முகமது அலி ரோடு வழியாக ’லால்பாக் ராஜாவை’ தூக்கிக்கொண்டு போகும்போது ‘கோவண்டி’ ’செம்பூர்’ ’தானே’ மற்றும் ’தாதர்’ போன்ற இடங்களில் நடந்த வினாயகர் ஊர்வலங்களை பத்து ஆண்டுகள் வேடிக்கை பார்த்திருக்கிறேன், ’கனபதி பப்பா மோரியா’ என்ற கோஷம் மட்டும்தான் போடப்பட்டது- அதனால்தான் அங்கெல்லாம் பிரச்சினைகள் இன்றி நடந்து வருகிறது.

குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான கோஷம் போடப்படுவது தவிர்க்கப்பட்டால் - தமிழகத்திலும் அந்நிலை ஏற்படும்.

கூலி வாங்கிக்கொண்டு கோஷம் போட்டு - தமிழகத்தில் ஹிந்து-முஸ்லிம் மத நல்லிணகத்தை கெடுக்கும் ’தீய சக்திகளுக்கு’ ‘சகிப்புத்தன்மை’ எப்பொழுதுதான் வருமோ?

பிறைநதிபுரத்தான் said...

ராபின்,
தங்களின் வருகைக்கும் - கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்- பிறைநதிபுரத்தான்

நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான். ஒத்துக்கிறேன். ஆனா, ‘மீண்டும்-மீண்டும்’ சொல்ற பொய்களை பொதுமக்கள் நாளடைவில் நம்பிவிடுவார்கள் என்ற அசைக்கமுடியாத ‘கொள்கை’யுள்ள சங்பரிவாரின் பொய் பிரச்சாரத்தை - உங்களின் உண்மையான கருத்துக்கள் எதிர்கொள்ளுமா என்பது சந்தேகமே..
இருந்தாலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
I.M. ரஹ்மத்துல்லா,BBA
அருப்புக்கோட்டை

ABU FAHEEM said...

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் "ஐஸ் அவுஸ்" வழியாக வினாயகர் ஊர்வலத்தை அனுமதித்தன் மூலம் பெரும் கலவரம் மூண்டு சென்னை சின்னாபின்னமானது. அதன் பின் அவ்வழியாக ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கபட்டு இன்று வரை பின்பற்றபடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐஸ் அவுஸ் வழியாகதான் போவேன் என இந்து முன்ணணி ராம கோபாலன் 25 பேருடன் சாலையில் உட்காந்து மறியல் செய்வதும்,அவரை கைது செய்வதும் போலீசாரின் வழக்கமான ஒன்று.சென்னையில் மட்டும் குறிப்பிட்ட அந்த வழி அனுமதிக்கபடாத போது மற்ற ஊர்களில் கலவரத்துக்குரிய வழிகளில் போலீஸ் அனுமதிப்பது காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளின் சதியோ என்றே எண்ணமே மேலோங்குகிறது.

பிறைநதிபுரத்தான் said...

நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான். ஒத்துக்கிறேன். ஆனா, ‘மீண்டும்-மீண்டும்’ சொல்ற பொய்களை பொதுமக்கள் நாளடைவில் நம்பிவிடுவார்கள் என்ற அசைக்கமுடியாத ‘கொள்கை’யுள்ள சங்பரிவாரின் பொய் பிரச்சாரத்தை - உங்களின் உண்மையான கருத்துக்கள் எதிர்கொள்ளுமா என்பது சந்தேகமே..

I.M. ரஹ்மத்துல்லா,BBA
அருப்புக்கோட்டை

ரஹ்மத்துல்லா,
பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடாமலா போய்விடுவான்?. ஹிந்துத்வ சக்திகள், எவ்வளவுதான் பொய்கள் கூறி புரட்டு பேசினாலும் - ’வாய்மை’ ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தங்களின் வாழ்த்துக்கு நன்றி

பிறைநதிபுரத்தான் said...

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் "ஐஸ் அவுஸ்" வழியாக வினாயகர் ஊர்வலத்தை அனுமதித்தன் மூலம் பெரும் கலவரம் மூண்டு சென்னை சின்னாபின்னமானது. அதன் பின் அவ்வழியாக ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கபட்டு இன்று வரை பின்பற்றபடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐஸ் அவுஸ் வழியாகதான் போவேன் என இந்து முன்ணணி ராம கோபாலன் 25 பேருடன் சாலையில் உட்காந்து மறியல் செய்வதும்,அவரை கைது செய்வதும் போலீசாரின் வழக்கமான ஒன்று.சென்னையில் மட்டும் குறிப்பிட்ட அந்த வழி அனுமதிக்கபடாத போது மற்ற ஊர்களில் கலவரத்துக்குரிய வழிகளில் போலீஸ் அனுமதிப்பது காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளின் சதியோ என்றே எண்ணமே மேலோங்குகிறது - அபு ஃபஹிம்

அபூ ஃபஹிம்,
தங்களின் நியாயமான சந்தேகம் பலருக்கும் உண்டு.

Anonymous said...

பிறைநதிபுரத்தானே,
முசுலிம் எதிர்ப்பு கோஷம் போடுவதால்தான் வினாயகர் ஊர்வலத்தை முசுலிம்கள் எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா?

என்ன கோஷம் போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பிறைநதிபுரத்தான் said...

அன்பின் அனானி,
வினாயகர் ஊர்வலத்திற்கு பெயர் பெற்ற புனே மற்றும் மும்பை நகரங்களில் - சிலைகளை தூக்கிச்செல்லும் மக்கள் ‘கனபதி பப்பா மோரியா - மங்கல் மூர்த்தி மோரியா..மோரியாரே..பப்பா மோரியாரே’ என்று ’மராத்தியில்’ சுதி மாறாமல் கோஷம் போட்டுக்கொண்டு செல்வார்கள். அது போல வினாயகரை வாழ்த்தி கோஷம் போட்டு சென்றால் தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் வராது.

Anonymous said...

மக்களுக்கு சகிப்புத்தன்மை வரவேண்டும்...எப்போது வருமோ?
- கமால்காந்த்


வினாயகர் ஊர்வலத்தின் போது போடப்படும், "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற ’மனித்நேயமிக்க’ கோஷங்களை முஸ்லிம்கள் என்றைக்குத்தான்’சகிப்பு தன்மையோடு’ கேட்பார்களோ தெரியவில்லை..

M Poovannan said...

எல்லாம் வடக்கத்தியர்கள் தமிழகத்திற்கு வந்தபின் ஏற்பட்ட நிலை. தமிழ்க்கடவுள் முருகன் ஓரங்கட்டப்பட்டு விநாயகருக்கு முக்கியத்த்வம் கொடுப்பதை இந்துக்கள் கருத்தில் கொண்டால் விநாயகர் சதுர்த்தியையே தமிழகத்தில் இல்லை என ஆக்கிவிடலாம்.

R.Benjamin Ponnaih said...

சரியாகச் சொன்னீர்கள்.

முச்சந்தியிலும், ஆற்றங்கரையிலும், ஆலமரத்தடியிலும் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்த நாட்களில் விநாயகரும் அமைதி விரும்பியாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென வீதி வீதிக்கு தற்காலிகமாக நிறுவப்பட்டவுடன், விநாயக வழிபாட்டுக் கொள்கைகளும், அவரைப் பற்றிய தெய்வீக உணர்வுகளும் வேறொரு ப்ரிமாணத்தில் தடம் புரண்டு நிற்பது வேதனை தருவதாய் உள்ளது.

இந்து சகோதரர்களுக்கு ஒரு சில வேண்டுகோள்:

1. இறைவனை, பரம்பொருளை, அருட்பெரும் ஜோதியை, நன்மை விளைவிக்கும் நாயகனாகவே பாருங்கள். இந்தப் பரம் பொருளின் திரு உருவத்தின் உருவத்தை உருவாகுவதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் தள்ளப்பட்டிருக்கிறதென்றால், நாம் தெய்வீகத்தை எவ்வளவு தூரம் கேள்விக்குறியாக்கியிருக்கிறோம் என எண்ணிப்பாருங்கள்.

2. சமய சடங்காச்சாரங்கள் மனுக்குலத்தை நல்வழிப்படுத்தும் முயற்ச்சியே தவிர, அடுத்தவரை புண்படுத்தவும், சீண்டிப்பார்க்கவும் உருவாக்கப்பட்டதல்லவென்று புரிந்து கொள்ளுங்கள். விநாயகரின் துதிப்பாடலும், அவருக்குப் புகழ் சேர்க்கும் மந்திரங்களும் உச்சரிக்கப்பட வேண்டிய உற்சாக ஊர்வலத்தில் அடுத்தவரை ஏசவும் தூற்றவும் வார்த்தைகள் உதிர்க்கப் படுவது ஏன்?

3. மிக முக்கியமாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏசவும் தூற்றவும் சொல்லித்தரும் ஆசான்கள் யாரும் அந்த ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் சொல்லித்தரும் கொள்கைகளினால் விநாயகரின் புகழ் பரப்படுவதில்லை, மாறாக சக சகோதர்களின் மனம் புண்பட்டு வன்முறை வெடிக்கும் என்பது இந்த ஆசான்களுக்கு ந்ன்றாகவே தெரியும். அந்த வன்முறையில் காயமடைவதோ உயிர்பலியாவதோ நிகழும் என்பதும் இந்த ஆசான்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி காயமோ, உயிர்பலியோ நடந்தால் அதில் தனக்கு ஏதும் இழப்பு ஏற்படாதவரை மற்றவறை முன்னிறுத்தி இவர்கள் நாடகம் ஆடுவார்கள். விநாயக ஊர்வலத்தில் வன்முறை வெடித்து பலர் காயமடைந்திருக்கலாம், ஆனால் காயமடைந்தவர்களில் உயர் சாதி இந்துக்கள் எத்தனை பேர் என்று எண்ணிப்பாருங்கள்.

4. இனியாவது விநாயகரின் அருளால், பெயரால் மனித நேயம் வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

பிறைநதிபுரத்தான் said...

அனானி,
வருகைக்கும் - கருத்திற்கும் நன்றி.

பிறைநதிபுரத்தான் said...

அய்யா பூவண்ணன்,
தங்களின் வருகைக்கும் - கருத்திற்கும் நன்றி.

பிறைநதிபுரத்தான் said...

அய்யா பெஞ்சமின்,
தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
வினாயகர் ஊர்வலத்தை அரசியலாக்கி - மத நல்லிணக்கத்துக்கு வேட்டு வைத்து (தென்காசியில் வைத்தது போல்) சாமான்ய மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் ‘ஹிந்துத்வா’ ஓரங்கட்டப்பட வேண்டும். அது நடந்தால் இந்தியா அமைதியாக இருக்கும்.

Anonymous said...

Hindus as well as Muslims do some introspection.

Not all those who take part in the procession/function are supporters
of Hindutva.Please understand this.
Are there no anti-Hindu views in this blog post.

'வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து ப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.
'
These are lies.Visva Hindu Parishad
is not opposed to other castes becoming Archakas.In Kerala they
supported it.They are not party to
the case before the court in this issue.VHP is against untouchability, so is RSS.
RSS teaches sanskrit to all Hindus
including women. RSS trains all Hindus is performing rituals. There are dalits who are members
of RSS/VHP. VHP and Hindu Munnai
trains Poojaris of small temples
every year.

You cannot curtail others fundamental rights. India is
not a islamic country.Remember
this first.Do all islamic countries give so many rights
to minorities. Muslims get Haj
subsidy.Tell me, in how many
muslim countries this subsidy
is given.Muslim students get
so many benefits from center and state, which Hindu students dont get.

பாபு said...

நன்முறையில் நெஞ்சைத் தொடும்வகையிலும், அதேநேரம் வன்முறையாளர்களுக்கு உறைக்கும் வகையிலும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

இந்தத் 'திடீர்' பிள்ளயார் ஊர்வலங்களுக்கான நீங்கள் சொல்லியுள்ள நெறிபடுத்தும் வரைமுறைகளை அரசு நடைமுறைப்படுத்துமானால் நல்லிணக்கவிரோத நரிகளை நிச்சயம் ஓரங்கட்டிவிடலாம்.

அல்லா பிச்சை said...

Not all those who take part in the procession/function are supporters
of Hindutva.

அனானி,
ஹிந்துக்களை அனவாசியமாக இதற்குள் இழுத்து கட்டுரையின் வாதத்தை திசை திருப்பாதீர்கள்.

வினாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு கலவரம் ஏற்பட்ட ஊர்களில் - ஹிந்துத்வாதான் பின்னனியில் உள்ளது என்பது -அனைவருக்கும் தெரியும். (செலக்டிவ் அம்னீஷியாவல் பீடிக்கப்பட்டுள்ள சங்பரிவாருக்குத்தான் உண்மைகள தெரிவதில்லையே?)

Visva Hindu Parishad
is not opposed to other castes becoming Archakas.In Kerala they
supported it.

வருவாய் இல்லாத 'ஏழை ' சாமிகளின் கோவில்களில் பிற சாதியினர் பூசாரிகளாக இருந்து நான் பார்த்திருக்கிறேன்!

காஞ்சி கருவறையிலும், திருப்பதி கோவிலிலும் குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள்தான் பூசாரிகளாக இருக்கவேண்டும் என்று கொடி பிடிக்கும் சங்பரிவாரக் கும்பல்கள் இந்த 'ஏழை ' சாமிகளைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

They are not party to
the case before the court in this issue.VHP is against untouchability, so is RSS.
RSS teaches sanskrit to all Hindus
including women.

அப்ப்படியா, பங்காரு லட்சுமனனோ அல்லது கிருபா நிதியோ ‘புனித’ நூல் போட்டுக்கொள்ள முடியுமா? சங்கரர் விடுவாரா? சங் பரிவாரம் விடுமா?

RSS trains all Hindus is performing rituals. There are dalits who are members
of RSS/VHP. VHP and Hindu Munnai
trains Poojaris of small temples
every year.

எத்தனைக் கோவில்கள் மேற்கூறையில்லாமல், கோவில் பராமரிப்பு செய்யும் அளவுக்குக் கூட வருமானமில்லாமல் இருக்கின்றன தெரியுமா என்று புள்ளி விவரம் எடுத்து அங்கெல்லாம் ‘பிற சாதியினரை’ திட்டமிட்டு பூசாரியாக்கிவிட்டு ’கோவில் கட்டி கும்பாபிஷேகம்’ நடத்தப்படுகிற பணக்கார கோவில்களில் மட்டும் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் சங்கராச்சாரிகளை - சங்பரிவாரம் கண்டிக்காதது ஏன்?

You cannot curtail others fundamental rights.

What do you mean by fundamental rights? Do you mean fundamental rights are only to raise objectionable slogans against a particular community? "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற ’மனித்நேயமிக்க’.

India is not a islamic country.Remember
this first.

I AGREE YOU ARE RIGHT. AT THE SAME TIME YOU SHOULD ALSO REMEMBER INDIA IS NOT A HINDU COUNTRY EITHER.

Do all islamic countries give so many rights to minorities. Muslims get Haj subsidy.

WHY SHOULD I BOTHER ABOUT OTHER MUSLIM COUNTRY. WHNE MY COUNTRY SPENDS CRORES OF RUPEES ON ORGANIZING KUMBHMELA AND YATHRA WHY SHOULD NOT IT SPEND FEW CRORES MONEY ON HAJ SUBSIDY?

Muslim students get so many benefits from center and state, which Hindu students dont get.

DO NOT MAKE SUCH A SWEEPING STATEMENTS WITHOUT ANY BASIS. PLEASE LIST DOWN THE BENEFITS PROVIDED. THEN I WILL COUNTER

பிறைநதிபுரத்தான் said...

Hindus as well as Muslims do some introspection - அனானி.

அனானி நீங்கள் சொல்வது போல இந்துக்களும் - முஸ்லிம்களும் ’அக ஆய்வு’ - ‘உள்முகச்சிந்த்னை’ செய்து பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

அது மட்டும் ஆரம்பித்து விட்டால் மனித உருவில் ’மதவெறி’ வளர்க்கும் விலங்கு மனப்பாண்மையினருக்கு இந்தியாவில் இடமில்லாது போய்விடும்.

பிறைநதிபுரத்தான் said...

பாபு,
தங்களின் வருகைக்கும்-கருத்துக்கும் நன்றி..

பிறைநதிபுரத்தான் said...

அல்லா பிச்சை,

அனானியின் அனைத்து வினாக்களுக்கும் மிகத்தெளிவான பதிலளித்து எனது வேலையை சுலபமாக்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தங்களின் வருகைக்கு இன்னுமொரு நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

உண்மையான நிலையை எடுத்துக் கூறியிருக்கின்றீர்கள். உண்மையில் கடவுளை அதாவது பிள்ளையாரை மதிக்கும் உண்மையான இந்து எவருமே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள். தனது கடவுளை தங்களை காக்க வேண்டிய கடவுளை இப்படி நடுவீதியில் இழுத்துச் சென்று கடலில் அல்லது ஆற்றில் தூக்கி வீசி இரண்டு நாட்களில் அந்தக் கடவுள் கை, கால், தலை என்று சின்னாபின்னமாகி கிடப்பதை எந்த விநாயக பக்தனும் ஒத்துக்கொள்ளமாட்டான்..? ஆகவே விநாயக சதுர்த்தியில் பங்குபெறும் தமிழக பக்தர்கள் போலியான பக்திகளையே கொண்டுள்ளனர்.

John said...

//பிறைநதிபுரத்தானே,
முசுலிம் எதிர்ப்பு கோஷம் போடுவதால்தான் வினாயகர் ஊர்வலத்தை முசுலிம்கள் எதிர்க்கிறார்கள் என்கிறீர்களா?

என்ன கோஷம் போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?//
அறிவிலியே, இந்த கேள்வி உனக்கே கிறுக்குத்தனமாக படவில்லையா. நீ வணங்குவது விநாயகரை, கரைப்பது அவரது சிலையை இதில் அடுத்த மதத்தவர் எப்படி சம்பந்தபடுகிறார்கள் தேவை இல்லாமல் ஏன் அவர்களை வசை பாட வேண்டும்.

John said...

//தனது கடவுளை தங்களை காக்க வேண்டிய கடவுளை இப்படி நடுவீதியில் இழுத்துச் சென்று கடலில் அல்லது ஆற்றில் தூக்கி வீசி இரண்டு நாட்களில் அந்தக் கடவுள் கை, கால், தலை என்று சின்னாபின்னமாகி கிடப்பதை எந்த விநாயக பக்தனும் ஒத்துக்கொள்ளமாட்டான்..?//

முற்றிலும் உண்மை. இது கடவுளை வணங்கும் செயல் அல்ல. கடவுளை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்.

Anonymous said...

அப்ப்படியா, பங்காரு லட்சுமனனோ அல்லது கிருபா நிதியோ ‘புனித’ நூல் போட்டுக்கொள்ள முடியுமா? சங்கரர் விடுவாரா? சங் பரிவாரம் விடுமா?

None prevents any Hindu from doing this.Murali Manohar Joshi introduced a program to train Dalits and others to perform
rituals and rites for all Hindus.
In Karnataka a Dalit woman has
built a temple for Ayyapa where
she does all Pooja.
So you better learn facts and stop
talking nonsense.

Robin said...

////தனது கடவுளை தங்களை காக்க வேண்டிய கடவுளை இப்படி நடுவீதியில் இழுத்துச் சென்று கடலில் அல்லது ஆற்றில் தூக்கி வீசி இரண்டு நாட்களில் அந்தக் கடவுள் கை, கால், தலை என்று சின்னாபின்னமாகி கிடப்பதை எந்த விநாயக பக்தனும் ஒத்துக்கொள்ளமாட்டான்..?//

முற்றிலும் உண்மை. இது கடவுளை வணங்கும் செயல் அல்ல. கடவுளை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்.//
இதை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை என்று தெரியவில்லை.

பிறைநதிபுரத்தான் said...

None prevents any Hindu from doing this.Murali Manohar Joshi introduced a program to train Dalits and others to perform rituals and rites for all Hindus.

In Karnataka a Dalit woman has
built a temple for Ayyapa where
she does all Pooja.

அனானி, தகவலுக்கு நன்றி

பிறைநதிபுரத்தான் said...

தனது கடவுளை தங்களை காக்க வேண்டிய கடவுளை இப்படி நடுவீதியில் இழுத்துச் சென்று கடலில் அல்லது ஆற்றில் தூக்கி வீசி இரண்டு நாட்களில் அந்தக் கடவுள் கை, கால், தலை என்று சின்னாபின்னமாகி கிடப்பதை எந்த விநாயக பக்தனும் ஒத்துக்கொள்ளமாட்டான்..?//

முற்றிலும் உண்மை. இது கடவுளை வணங்கும் செயல் அல்ல. கடவுளை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்.//

இதை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை என்று தெரியவில்லை. - ராபின்

இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யப்பட்ட செயலாக நான் கருதவில்லை.

அல்லா பிச்சை said...

அனானி, தகவலுக்கு நன்றி- பிறைநதிபுரத்தான்

பொய், புரட்டு, பித்தலாட்டத்துக்கு நன்றியா?..

None prevents any Hindu from doing this.Murali Manohar Joshi introduced a program to train Dalits and others to perform rituals and rites for all Hindus.

அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..

அப்படியா? IS ANY NON-DALIT IS TAKING RITUAL SERVICE FROM DALIT PUROHIT? முரளி மனோகர் ஜோஷி வீட்டு ‘பூஜைகளில்’ கலந்து கொள்ள அவரின் மூலம் பயிற்சியளிக்கப்பட்ட ‘தலித்’ பூஜாரிகளை அனுமதிப்பாரா?

You give undue importance and respect to the Manusmriti that defines and defend varna (caste system) but disrespect the Constitution that ensures equal rights to all..

So you better learn facts and stop WRITING nonsense.

Sathish said...

You are correct.

There are people who will never think abt this but have to.