வெட்கித் தலைகுனியும் மதவெறி

வெட்கித் தலைகுனியும் மதவெறி
உலகெங்கும் மதத்தின் பெயரால் மதவெறி வளர்த்து வன்முறை, தூண்டி, கம்பு, கத்தி, கோடாறி, சூலம் மற்றும் வெடிகுண்டு மூலம் அப்பாவி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிரண்டிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில் மனித நேயம் இன்னும் இருப்பதை பறைசாற்றும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுண்டதேவி கோவிலில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த பூஜயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 150 பக்தர்கள் மரணித்தனர். அந்த ’தள்ளுமுள்ளுக்கு’ - இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளிதான் காரணம் என்று ஊடகம் மற்றும் இணைய தளங்களின் மூலம் வதந்தி மூலம் பரப்பட்டடு முஸ்லிம்களுக்கெதிரான துவேஷம் குறையாமல் மிககவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கியவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்பதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், இரத்த தானம் வழங்குவதிலும் ஜோத்பூர் முஸ்லிம்கள் காட்டிய மனிதநேயம் வழக்கம்போல ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உற்றார் உறவினரை இழந்து இந்து சகோதரர்கள் துக்கத்தில் தவிக்கும்போது, விமரிசையான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை’ என்று ஜோத்பூர் நகர தலைமை காஜியும், பிற இஸ்லாமிய அமைப்புக்களும் அறிவித்தனர். அதனால் இந்த வருடம் நோன்பு பெருநாள் பண்டிகை - ’சடங்குக்காக’ மட்டும் கொண்டாடப்பட்டது.

நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, மதவெறி தூண்டி மக்களை கூறு போடும் வதந்திகளுக்கும் - திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு - ’மதம் தாண்டி’ உறவாடும் இத்தகைய மனித நேய நிகழ்வுகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு வருகிறதே என்று வருந்துவதால்தான் இந்தப்பதிவு.

தொடர்புடைய சுட்டி:

16 பின்னூட்டங்கள்:

Robin said...

மனித ரத்தத்தை குடித்து பதவிக்கு வர துடிக்கும் பாசிச ஜனதா கட்சி இருக்கும்வரை மதவெறி தூண்டிவிடப்பட்டுகொண்டேதான் இருக்கும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களின் இந்த கட்டுரை, www.tamilmanam.net இல் காணபடவில்லையே.................

பிறைநதிபுரத்தான் said...

ராபின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பிறைநதிபுரத்தான் said...

அலைக்கும் சலாம் அனானி,
தமிழ்மணத்தில் பதிவேற்றியதும்
நேற்று காணப்பட்டது. இன்று காணப்படவில்லை ஏன் என்று தெரியவில்லை..:((

அல்லா பிச்சை said...

பிறைநதி,
மனிதநேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு உதாரணமான இந்நிகழ்வை தமிழ்மணத்தில் பதிவு செய்ததற்கு நன்றி..

Anonymous said...

ராஜஸ்தான், ஜோத்பூரில் உள்ள சாமுண்டதேவி கோவில் கூட்ட நெரிசலுக்கு - முஸ்லிம் தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளி என்று ‘நல்ல தந்தி’ என்ற பதிவில் படித்தேன், இங்கே முற்றிலும் மாறுபட்ட செய்தியை பார்க்கிறேன்..எது உண்மை?

குழம்பிய தமிழன்

பிறைநதிபுரத்தான் said...

அல்லா பிச்சை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பிறைநதிபுரத்தான் said...

ராஜஸ்தான், ஜோத்பூரில் உள்ள சாமுண்டதேவி கோவில் கூட்ட நெரிசலுக்கு - முஸ்லிம் தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளி என்று ‘நல்ல தந்தி’ என்ற பதிவில் படித்தேன், இங்கே முற்றிலும் மாறுபட்ட செய்தியை பார்க்கிறேன்..எது உண்மை?
குழம்பிய தமிழன்

என்னுடைய பதிவுக்கு ஆதாரம் (Times of India, epaper, dated 2nd Ocober, 2008, Jaipur Edition) என்னெவென்பதை குறிப்பிட்டுள்ளேன்.

superlinks said...

நல்லா இருக்குய்யா உங்க மதவெறி எதிர்ப்பு இந்துமதத்தை,மதவெறியை மட்டும் எதிர்ப்பீர்கள் இஸ்லாத்தை பற்றி வாயே திறக்க மாட்டீர்கள் இதற்கு உங்களுக்கு பெரியார் ஒரு லேபிள் உங்களுக்கு.

superlinks said...

பிறைநதிபுரத்தான் உங்கள் தளத்தை பார்த்தேன்.
நல்லா இருக்குய்யா உங்க மதவெறி எதிர்ப்பு. இந்துமதத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் அதை எதிர்க்க‌ மட்டும் பெரியார் தேவைபடுகிறார் இஸ்லாத்தை பற்றி வாயே திறக்க மாட்டீர்கள் இந்துமதவெறியை கிழிக்க மட்டும் தான் உங்களுக்கு பெரியார் தேவையா?

Anonymous said...

தோழரே!
நல்ல பதிவு..
உண்மையை எடுத்துரைத்த நடுநிலையான பதிவு..

பிறைநதிபுரத்தான் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் தளத்தை பார்த்தேன்.

நல்லா இருக்குய்யா உங்க மதவெறி எதிர்ப்பு. இந்துமதத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் அதை எதிர்க்க‌ மட்டும் பெரியார் தேவைபடுகிறார் இஸ்லாத்தை பற்றி வாயே திறக்க மாட்டீர்கள் இந்துமதவெறியை கிழிக்க மட்டும் தான் உங்களுக்கு பெரியார் தேவையா? -

வருகைக்கும் - கருத்துக்கும் நன்றி,
பதிவு மாறி பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள்..

இஸ்லாம் பற்றி பெரியாரின் கருத்து என்னவென்று ‘எந்த’ திரித்தலும் இல்லாமல் எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்.

மதங்களின் பெயரில் - மதவெறி வளர்க்கும் காட்டுமிராண்டிகளுக்கு ‘தனித்தனி’ அளவுகோல் கிடையாது..

இதே தளத்தில் ‘இனிய பெருநாள் வாழ்த்து என்ற பதிவை படித்தீர்களா?

பிறைநதிபுரத்தான் said...

தோழரே!
நல்ல பதிவு..
உண்மையை எடுத்துரைத்த நடுநிலையான பதிவு..superlink

நன்றி superlink தோழரே,

பிறைநதிபுரத்தான் said...

அய்யா சூப்பருலிங்க்ஸ் தோழரே,

பதிவில் இடப்பட்ட கட்டுரைகளை கொஞ்சம் கவனமாக படிச்சுப்பாருங்க.

சாதிப்பிரச்சினைய ஒழிக்க - அய்யா பெரியார் - கடவுள் மறுப்பு கொள்கையையோடு - ‘முகமதியத்தையும்’ ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு ‘சாதிப்பேயை’ விரட்டினாரே என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
அவ்வளவுதான்..

இஸ்லாத்தை பற்றிய தந்தை பெரியாரின் கருத்துக்களை ‘வெட்டியோ’ ‘திரித்தோ’ நான் பதிவிட்டிருந்தால் - இஸ்லாமிய மதவெறியனாக என்னை சித்தரிப்பதை ஏற்றுக்கொள்வேன்..

அய்யா, தயவு செய்து என் பதிவு சம்பந்தமான உங்களின் கருத்தை - என் தளத்தில் மட்டும் இடுங்கள். பிறரின் தளத்தில் இட்டு ‘அவர்களுக்கு’ - ‘எனக்கும்’ இடைஞ்சலை கொடுக்காதீர்கள்.

என்னைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்கன்னு நான் அங்க போய் படிக்கவேண்டியதாக இருக்கு.

தளம் மாறி - பதிவு மாறி இடப்படும் தவறான பின்னூட்டங்கள் சம்பந்தமாக ‘வினவு’ தளத்தில் என் நிலைப்பாடை விளக்கிவிட்டேன்.. அங்க போய் படிச்சிக்குங்க..

நல்லா இருக்குய்யா, ஒங்க புரிதலும் - பின்னூட்டும் விதமும்..

மீண்டும் சந்திப்போமா..?

செங்கொடி said...

அன்பு பிறைநதி,

உங்கள் பதிவு நன்று. எந்த நிகழ்வானாலும் துன்பமானாலும் இன்பமென்றாலும் கவனமாய் திட்டமிட்டு இஸ்லாமியத்திற்கெதிரான வெறி பரப்பப்படுகிறது. இதற்கான சான்றுகள் ஒன்றிரண்டல்ல, இன்றுநேற்றல்ல ஏராளம் என்றும். ஆனால் இது ஒரு மதத்திற்கெதிரான இன்னொரு மதத்தின் வெறி மட்டுமா? அல்லது அதன் வேர் வேறெங்கிலும் இருக்கிறதா? இதைத்தேடி உங்களின் சிந்தனையை செலுத்துங்களேன்.

தோழமையுடன்,
செங்கொடி

பிறைநதிபுரத்தான் said...

வணக்கம் செங்கொடி,

உங்களின் புரிதலுக்கும்-கருத்துக்கும் நன்றி.