இந்துத்வம்: சர்வ சாதி சம்மததுவமா?

3 பின்னூட்டங்கள்

கட்டுக்கதைகளை மட்டும் அடிப்படையாக கொண்ட தங்களின் கட்டுரையை படித்தேன். 'எம்மதமும் சம்மதமே ' என்கிறார்களாம் இந்துக்கள். அவர்களிடம் 'எச்சாதியும் சம்மதமா ? 'என்று வினவினால், 'இல்லவே இல்லை ' என்ற குரல்தானே ஒங்கி ஒலிக்கிறது! தன்மதத்தை சார்ந்த பிற சாதியினரையே சம அங்கத்தினராக கருதாத உங்களால் எப்படி பெருந்தன்மையாக எம்மதமும் சம்மதம் என கூறமுடிகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத 'எம்மதமும் சம்மதம் ' என்ற தொடர் எதுகை-மோனைக்காக போடப்பட்டதா?.
இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றா? விவரங்களுக்கு
ஒரு வாதத்திற்காக 'எம்மதமும் சம்மதம் ' என்று வைத்துக்கொண்டால் இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றா? கடவுளுக்கு உருவம் கிடையாது, கடவுள் ஒருவரே, அவரை அரூபன் என்கிற ஒரே ஒரு கொள்கையில்தான் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால் இந்து மதத்தால் போற்றப்படும் சாதி வேறுபாடு, மறு ஜென்மம், நடைமுறை பல உருவ வழிபாடு போன்றவைகளில் அனுவளவும் ஒற்றுமை கிடையதே!
அவ்வாறு முடிச்சுப்போடுவது பெருந்தன்மையினால் என்றால், சமீப காலத்தில் இந்தியாவில் இருக்கிற அனைவரும் (முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தினர்) 'ஹிந்துக்கள் ' என்று தங்களை அடையாளப்படுத்தி அழைக்கவேண்டும் என்று காவி கும்பல் அடிக்கடி கூப்பாடு போட்டுவருகிறதே ? இந்த கோஷத்தை 'வீரத்துறவி' இராமகோபலனிலிருந்து 'இரும்பு மனிதர் அத்வானி ' வரை எதிரொளிக்கிறார்களே?
'வெறித்தனமான மதப்பற்று இந்துக்களிடம் கிடையாது என்பது வரலாற்று உண்மை ' என்று நரித்தனமாக இரண்டு அம்பட்டமான பொய்களை ஒரே வரியில் எழுதியிருக்கிரீர்களே! மதுரையில், மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஜைன மதத்தை சார்ந்த ஏறக்குறைய 8000 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அது ஏன்? (http://www.themronline.com/200403m1.html/ The Modern Rationalist, March 2004).

'அதீத மதப்பற்றுள்ளவர்கள் ' என்ற அடைமொழியை யாருக்கு தந்திருக்கிறீர்கள் தெரியுமா? பாதிரியார்களையும் பாலகர்களையும் கொன்ற கொடியவர்களுக்கும், கண்ணியஸ்த்ரிகளை மானப்பங்கம் செய்த கயவாலிகளுக்கும்.
தெரு முனைகளிலும் பஸ் நிறுத்தங்களிலும் நின்றுகொண்டு வாய்கிழிய கத்தி 'பாவிகளை ' பரிசுத்தவான்களாக்கப் போவதாக 'பூச்சாண்டி ' காட்டுகிறவர்களுக்கும் - தன் ஆதிக்கத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களிடம் ஓடிப்போய்விட்டால் இந்து மதக் கூடாரமே காலியாகி விடுமே என்று அவசரமாய் 'மதமாற்றத்தடை சட்டம் ' கொண்டு வந்தவர்களுக்கும் - அதை வரவேற்று அகில இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டுமென்று கூச்சல் போடுவபவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

பிற மதங்களை அவதூறாக பேசுவதோ, பழிப்பதோ கிண்டல் செய்வதோ இந்துக்களின் இரத்தத்தில் கிடையாதாம் - அப்படியென்றால், இந்துக்களில் பெரும்பான்மை பிரிவினரை 'தீட்டுள்ளவர்களாக ' 'தீண்டத்தகாதவர்களாக ' மதரீதியாக அறிவித்ததை எதில் சேர்ப்பது ? அன்று போட்ட விதைதானே 21 ஆம் நூற்றாண்டில் கூட கோவிலின் கருவறைக்குள் உயர்சாதியினரை தவிர பிற சாதியினர் நுழைய, பூசை செய்ய தடையாக உள்ளது. அரிஜனப்பிரிவை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்று அரசு சட்டம் செய்தால் கூட அதற்கு இந்து தர்மம் (!) இடம் தரவில்லையென்ற சிறுபான்மை உயர்சாதியினரின் வாதம் வலிமையாக ஒலிக்கிறதே?

வர்னாஷிரமத்தை 'ஆக்சிஜனாக'க்கொண்டு 'மாடு மேய்க்கிறவன் பரம்பரை மாடு மேய்த்துக்கொண்டிருக்கவேண்டும் அவர்கள் வேதம் ஓதக்கூடாது ' என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் அயோக்கியர்களுக்கு ' (http://www.thinnai.com/pl0415042.html) அபிஷேகம் செய்யும் அதிசயம் நடப்பது இந்த சனாதான மதத்தில்தானே!.

விலங்குகளின் மூத்திரத்திற்கும் சாணத்திற்கும் கொடுக்கும் மரியாதையை கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மனிதர்களுக்கு அளிக்காமல் அவர்களை தீட்டுள்ளவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் அழைத்துவிட்டு! 'பாவிகள்' என்று பிறர் அழைத்ததற்காக பொங்கியெழுவது போல் நடித்து - சிண்டு முடியும் உங்களை குழப்பவாதி என்று அழைப்பதுதான் தகும். பண்பாடு அற்றவர்கள் யார்? கோடிக்கனக்கான பூர்வீககுடிமக்களை சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று அழைத்த 'புனித பூநூலர்களா' அல்லது 'பாவிகள்' என்று அழைப்பவர்களா?

மற்ற மதங்களின் தொழுகைத்தளங்களில் திட்டம்போட்டு கள்ளத்தனமாக இரவோடிரவாக சிலைகளை புதைத்து வைத்துவிட்டு அந்த இடம் முன்னாள் இந்து வழிபாட்டிடம் தான் என்று 'உயர் சாதியினரை' முதலாளிகளாகவும், ஆசிரியர்களாகவும் கொண்ட பத்திரிக்கைகளிலும் இணையத்தளத்திலும் வதந்தீக்களை பரவவிட்டு பதட்டம் விளைவிப்பது யார்?
சென்னை தியாகராய நகரில் பள்ளிவாசலுக்கான இடத்தில் திடீர் பிள்ளையார் எவ்வாறு முளைத்ததோ அவ்வாறே பாப்ரி மஸ்ஜிதில் 'ராமர் சிலை' வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மை தெரிந்து மூக்குடைப்பட்டு 'பிள்ளையார் சிலையை' தூக்கிக்கொண்டு ஓடியது போல், பாபர் மஸ்ஜிதிலிருந்து 'ராமர் சிலையை' தூக்கிக்கொண்டு ஒடும் காலம் வெகு விரைவில் வரும்.

இதே வழிமுறையில்தானே காசி, மதுரா மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களை இந்திய முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க RSS/VHP கும்பலால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா. இந்த நிகழ்வுகளை கண்டித்து எழுதினால் மட்டும் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுவதுதான் உண்மையான சனாதன மதத்தின் அடையாளமா?
இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, 'நடமாடும் தெய்வம்' காஞ்சி சங்கரரை கொண்டு சமாதானம் முயற்சி செய்வதுபோல் நாடகம் போட்டுக்கொண்டே, 'இலவச சூலவழங்கிகள்' மூலம் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று 'சவடால்கள் ' விடுவதுதான் சனாதான தருமத்தின் லட்சனமா?
விவேகனந்தரின் கருத்துக்களை பேசிய பிரதமர் வாஜ்பாயின் 'அதே வாய் ' தான் கூட்டனியின் தேர்தல் அறிக்கையில் விலங்குகளான பசுக்களுக்கு அளிக்கும் உத்திரவாதத்தை கூட கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் தனியார் சட்டத்தை பின்பற்றும் உரிமையை அளிக்க மறுக்கிறது. பொது சிவில் சட்டம் பற்றி வாயும், மற்றதும் கிழிய பேசிவருபவர்கள், முதலில் இந்துக்களுக்காக 'பொதுப்பூனூல் சட்டம்' கொண்டுவந்து இந்துக்களான ஆதி திராவிடர்களையும் அந்தனர்களையும் சமமாக்க வேண்டியதுதானே!

மன முதிர்ச்சியற்ற(!) கற்கால மனிதர்களுக்குக்காக சலுகை செய்தே குறுங் கடவுளர்களின் மற்றும் பெருங்கடவுளர்களின் எண்ணிக்கை இந்து மத வழிபாட்டில் மலிந்துவிட்டது என்ற தங்களின் உண்மை கூற்றை நானும் ஏற்கிறேன். நீங்கள் வேண்டுமானால் 'நட்ட கல்லெல்லாம் கடவுள்; கடவுள் நம்பிக்கையுள்ள கதாசிரியர்களின் கதையெல்லாம் புராணங்கள்; புராணங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் தெய்வங்கள்' என்ற கொள்கையை கடைபிடியுங்கள். அதற்காக உங்களால் வணங்கப்படும் அனைத்து 'கற்பனை' தெய்வங்களையும் நியாயப்படுத்துவதற்காக - இந்திய இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடங்களில் 'ஜென்ம பூமிகளை' உருவாக்க முயற்சிக்கிறீர்களே?

'எந்த பிற மதத்தவர் இதுவே எங்கள் கடவுள் என்று எதைகூறினாலும், இந்துக்கள் அதை மதித்து ஏற்பார்களாம்' - பிறரின் கடவுள்களை மட்டும் ஏற்றுக்கொண்டு அந்த மதம் வலியுறுத்திய கொள்கைகளை விட்டுவிட்டு எம்மதமும் சம்மதம் என்று வெற்று வசனங்கள் பேசிப்பயன் என்ன?
உதாரணமாக, ஜாதி வேறுபாடு கூடாது. பிறப்பு அடிப்படையில் பேதம் காணக்கூடாது என்ற இஸ்லாமிய மதக்கொள்கைகளை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளாமல் 'ஈஸ்வரையும் வணங்குவோம் அல்லாவையும் வணங்குவோம்' என்று கூறுவது சரியா?

அடுத்த குற்றச்சாட்டு 'முகலாயர்கள் இந்துக்களின் கோவில்களை இடித்தார்கள்: கொள்ளையடித்தார்கள்' - கோவிலின் பெயரில் கொள்ளையடித்து பரம்பரை பரம்பரையாக வயிறு வளர்த்தவர்கள் யார் என்பது 'மன முதிர்ச்சியடைந்த' அனைவருக்கும் தெரியும்? மிகச்சமீபத்தில், புகழ்பெற்ற திருப்பதி வைனவ ஆலயத்தை சூரையாட திட்டம் திட்டியது 'கஜினி முகம்மது' அல்ல - சாட்சாத் காஞ்சி பெரியவர் சங்கரர்தான் என்பது உங்களுக்கு தெரியாதா? இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் தரிசனத்து எட்டாத, பிறசாதி சாமான்யனுக்கு பிரசாதம் கூட கிட்டாத, உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்து- பிற சாதியினரின் வாயிலும் வயிற்றிலும் அடித்து குறிப்பிட்ட சாதியினருக்கு வருவாய் ஈட்டிதந்த கோயில்கள் இருந்தாலென்ன இடிந்தாலென்ன என்றுதான் முகலாயர்கள் இடிக்கும்போது பெரும்பான்மை இந்து மக்கள் அமைதியாக இருந்து விட்டார்கள்.!

அது யார்?
கொள்ளையடிக்க வந்த முகலாய மன்னர்களுக்கு தன் மதத்தை சார்ந்த ராஜபுத்திர பென்களை கூட்டிக்கொடுத்து 'சானக்யத்தனத்தோடு' திருமணம் செய்து வைத்தது யார்? முகலாய மாப்பிள்ளமார்களுக்கு 'மஹா' பட்டமளித்து பரிசுகள் பெற்று மகிழ்ந்தது யார்? அற்ப நில மான்யங்களுக்காக அரசவை ஆலோசகர்களாக இருந்து 'இந்து மதத்தை சார்ந்த பிராமனரல்லாத' குறுநில மன்னர்களையெல்லாம் முகலாயர்களிடம் 'போட்டுக்கொடுத்தும்' 'காட்டிக்கொடுத்தும்' பதவி சுகமனுபவித்தது யார்?
பாபர் காலத்திலிருந்து ஒளரங்கசீப் காலம் வரை அற்பக்கூலிக்காக அவர்களின் படைகளில் வீரர்களாக பணிபுரிந்து முகலாயர்கள் சார்பாக இந்து நாட்டின் மீதெல்லாம் படையெடுத்தது யார்? முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? ஏறத்தாழ 700 ஆண்டு முகலாயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு ஆலோசகர்களாக பனிபுரிந்த 'சாதியினரையும்' மற்றும் அவர்களின் படைகளில் போர்வீரர்களாக பணிபுரிந்த 'சாதியினரையும் ' அடையாளங்கண்டு அந்த வந்தேறிகளை- எட்டப்பன்களை- தேசதுரோகிகளை முதலில் நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்.
கஜினி படையெடுப்பு
'நீ ஒரு முறை ஏமாந்தால் ஏமாற்றியவன் குற்றம்; நீ அடுத்த முறை ஏமாந்தால் அது உன் குற்றம்' என்பது முதுமொழி! கஜினி முகம்மதுவை 16 முறை படையெடுக்க விட்டு வேடிக்கை பார்த்தது யார் குற்றம் ? சோமனாதபுரத்தில் இருந்த எல்லோருமே என்ன வாஜ்பாய்க்களா, கஜினிமுகம்மது ஒவ்வொருமுறையும் படையோடு வரும்போது கைக்கட்டி- வாய்பொத்தி வேடிக்கை பார்க்க?

சங்கின் தேசபக்தி: சுதந்திர போராட்டத்தில் அனுவளவு பங்களிக்காமல், ஆங்கிலேயரிடம் சரனாகதி அடைந்து, எட்டப்பன் வேலைப்பார்த்த சங்பரிவார் கும்பல் இப்போது நாட்டுப்பற்றைப்பற்றி உரையாற்றுவது கேட்டு காதுக்கே கூச்சமாக இருக்கிறது. சிறுவனாக இருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கையைக்கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர், தான் சுதந்திர தாகம் கொண்டு பொங்கியெழுந்து இயக்கத்தில் பங்கெடுத்ததாக ஆற்றிய 'வீராவேச' உரையின் அடிப்படையை ஆராய்ந்த பிரபல செய்தி ஊடகம் வெளிக்கொணர்ந்த உண்மை என்ன தெரியுமா? 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நான் பங்கெடுக்கவில்லை ஓரத்தில் நின்று வேடிக்கைத்தான் (!) பார்த்தேன். அதனால் தயவு செய்து என்னை விடுதலை செய்துவிடுங்கள் என்று மன்னிப்பு கடித எழுதிக்கொடுத்த 'கடித நகலை' வெளியிட்டவுடன் (http://www.flonnet.com/fl1503/15031150.htm) வாஜ்பாயும் அவரின் தொண்டரடி-பொடிகளும் வாயை திறக்கவில்லையே! இந்த செய்தி சம்பந்தமாக மேலும் விவாதம் நடத்த வேண்டாம் என்று மேற்கண்ட பத்திரிக்கை நிறுவனத்தை வேண்டிக்கொண்டதும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு தெரியாதா?
இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் பெருவாரியாக வாழும் இந்நாட்டில் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எண்ணிப்பார்த்து இந்துக்களிடம் பெருந்தண்மையாக நடந்துக் கொள்ளவேண்டுமாம் - அடப்பாவிங்களா! மதம் சாதி பெயரால் மக்களை மொட்டையடித்த பண்டாரங்களும் பரதேசிகளும் இந்திய முஸ்லிம்களுக்கு 'அளித்த ' சலுகைகளில் ஒன்றிரண்டையாவது 'திண்ணை' வாசகர்களுக்காக பட்டியலிட்டு காட்டுங்களேன்!.
சங்பரிவாரிடம் 'சலுகை' பிச்சை கேட்டு வாழ, இந்திய முஸ்லிம்களை 'ஏமாளி' தலித்களாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் கருதாதீர்கள். உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ அனுமதியில்லை என்று அறிந்ததும் கண்மூடித்தனமாக பின்பற்றி வந்த இந்து மதத்தையே வீசியெறிந்துவிட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த முன்னோர்களின் வழியில் வந்த எங்களுக்கா - உரிமைகளுக்காக போராட தெரியாது?
சொந்த நாட்டிலே, எங்களுக்கான உரிமைகளை ஜனநாயக முறையில் கேட்கவும், போராடவும் தெரியும். உரிமைகளை பெறும் வழிமுறையையும், அதை அடைவதற்கான தைரியத்தையும், போராட்டக்குணத்தையும் இஸ்லாம் தெளிவாக கூறியிருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் யார்?
'முகலாயர்கள் செய்த அட்டூழியத்துக்காக முஸ்லிம்களை இந்துக்கள் பழி வாங்கியிருக்க முடியுமாம். இந்துக்களின் சகிப்பு தன்மையின் காரணமாக அவர்கள் பழிவாங்க வில்லையாம்'- முகலாயர்கள் செய்ததற்காக இந்திய முஸ்லிம்களை ஏன் பழிவாங்கவேண்டும்? இந்திய முஸ்லிம்கள் யார்? அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா, அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா அல்லது முகலாயர்களுடன் படைவீரர்களாக வந்து இங்கேயே தங்கி விட்டவர்களா? உங்களுக்கெல்லாம் புரியும் வகையிலே 'பிழைப்புக்காக ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு கணவாய் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவில நுழைந்து, பூர்வீகக்குடிகளை மதம், சாதி பெயரில் கூறு போட்டு அடிமையாக்கி அட்டூழியம் செய்து வரும் கயவர்கள் கூட்டம் அல்ல - இந்திய முஸ்லிம்கள்' என்று சுருக்கென சொல்லிவிடலாம். ஆனால் மற்ற வாசகர்களுக்காக கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.
உங்களுக்கு அருகாமையில் வசிக்கும் முஸ்லிம்களின் உடல், நிறம், பழக்க வழக்கம், மொழி மற்றும் வாழ்க்கை முறையை சற்று உற்று நோக்குங்கள். உயர் சாதி இந்துக்களைப் போலல்லாமல் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மனிதர்களை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஏன் அப்படி?

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் 'தீண்டத்தகாதவர்களாக' (உங்களால்) பிற்படுத்தப்பட்டவர்களாக' (உங்களால்) மற்றும் 'மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக' (உங்களால்) முத்திரைக்குத்தப்பட்டு சொந்த மண்ணிலேயே வந்தேறிகளான உயர் சாதியினரால் சுரண்டப்பட்ட முன்னால் இந்துக்கள்தான் - இந்திய முஸ்லிம்கள். கட்டு மீறி போகும் சாதி வெறி கொடுமை, சகிப்புத்தன்மையற்ற வர்ணாஷிரமக்கொள்கை திணிப்பு இவைகளை விரும்பாத - சுமரியாதை, சுதந்திரம் வேண்டி- முன்னாளில் இஸ்லாத்துக்குள் நுழைந்தவர்கள்தான் இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

ஒரே மதத்தில் இருந்தும் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் 'புனிதம்' நிறைந்தவர்களாக்கி 'பூ நூல் போட்டு பூசித்து - மற்றவர்களை 'மனிதக்கழிவுகளாக' வருணித்து 'அடிமை விலங்கு பூட்டி' - சாதிக்கொரு நீதி பேசி வந்த (இன்னும் பேசி வரும்) உயர்சாதி வெறியர்களின், செருக்கர்களின் அட்டூழியத்திலிருந்து சமூக விடுதலைப்பெற - அந்நாளில் இஸ்லாத்துக்குள் ஓடி நுழைந்த - தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள்களின் வாரிசுகள்தான் இக்கால இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

'அவாள்களின்' ஆதிக்கத்தை எதிர்த்து இஸ்லாத்துக்குள் நுழைய எத்தனிக்கும் தலித்துக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சட்டத்தின் மூலம் எத்தனை நாட்களுக்கு கட்டிப்போடமுடியும். ஆதிக்கவாதிகளை எட்டி உதைத்து 'முடிந்தால் பூனூல் போடு இல்லையென்றால் 'தொப்பி' போட்டுக்கொள்கிறோம்' என்று இஸ்லாத்தை நோக்கி புறப்படும் சூழ்நிலை உருவாகும், அப்போது ஆயிரக்கணக்கான மீனாட்சிபுரங்கள் ரஹமத் நகர்களாக மாறும். பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ஏகலைவன்களுக்கும், நந்தன்களுக்கும், சம்பூகன்களுக்கும் அடைக்கலம் தந்ததுதான் முகலாயர்களால் இம்மண்ணிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்லாம் - அதனால்தான் முகலாயர்கள் சென்று பலநூறு ஆண்டுகள் ஆகியும் எங்கள் பாட்டன் முப்பாட்டன்கள் புகுந்த இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் உறுதியான கொள்கைபிடிப்போடு இருக்கிறோம் - இருப்போம்.

பெருந்தன்மை யாருக்கு வேண்டும் ?
முஸ்லிம்கள் இந்துக்களிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொள்ள வேண்டுமாம். நேசத்துடனும் பாசத்துடனும் மாமன் மச்சானாக வாழ்ந்து வந்த இந்து-முஸ்லிம் உறவை கெடுத்தது இன்னும் கெடுத்துக்கொண்டிருப்பது யார் என்று 'மனமுதிர்ச்சியுற்றவர்களுக்கு' தெரியும். நன்றியுனர்வு யாருக்கு வேண்டும் தெரியுமா? மனு போன்ற 'அதீதசாதிப்பற்றுள்ளவர்களை ' தங்களின் மூதாதையர்களை கொண்டவர்களுக்கும் - கொண்டாடியவர்களுக்கும் - சங்கரர்களும், சரசுவதிகளும் (தயானந்த) சொல்கின்ற 'சாதிப்பழிப்பு ' கருத்துக்களுக்கு இன்னும் சாமரம் வீசி வருபவர்களுக்குத்தான் நன்றியுனர்வு வேண்டும்.
மிதிக்கின்றவர்களை துதிக்கின்ற, குட்டி குட்டியே குனியவைத்தவர்களையே தங்களின் முதுகிலே சவாரி செய்ய அனுமதித்திருக்கும் ஏமாளிகளான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தினருக்கு - மிதித்தவர்களும், குட்டியவர்களும்தான் நன்றி கூறவேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடு
இந்திய முஸ்லிம்கள் ஏமாளிகளாக கோழைகளாக 'சூல வழங்கிகள் ' விரட்ட விரட்ட ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்றோ, சூடு சொரனை வீரம் சுயமரியாதையெல்லாம் இழந்து அயோத்தி, மதுரா, காஷி என்று கேட்பதையெல்லாம் கொடுத்து தனித்துவத்தையும் இழந்து வாழவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாங்கள் அடைக்கலம் புகுந்த இஸ்லாம் அநீதியை எதிர்த்து போராடவும் அவசியமானால் போரிடவும் சொல்லியிருக்கிறது, ஆணவத்தோடு கன்னத்தில் அறைந்தவனுக்கு பதிலடி கொடுக்கும்படி இஸ்லாம் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம்களான நாங்கள் ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் குழப்பவாதிகளிடமும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம், மிரட்டலுக்கு இணங்கிப்போக மாட்டோம். நியாயம் எங்கள் பக்கத்தில் இருந்தால் இறுதி மூச்சு வரை போராடுவோம். அது பொது சிவில் சட்டமாகட்டும் இடிக்கப்பட்ட எங்களின் பாப்ரி மஸ்ஜிதாகட்டும். தங்களைப் போன்றவர்களுக்கு பொய்யைக்கூறி சிண்டு முடிக்க மட்டும்தான் தெரியும் ஆனால் உண்மையை இயம்பி உங்களின் சிண்டைப்பிடிக்க தெரியும்.
நன்றி:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் வாஜ்பாய் பங்கு: http://www.flonnet.com/fl1503/15031150.ht
பற்றி மேலும் அறிய
http://www.flonnet.com/fl1503/15031160.htm (திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜா (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404155&format=html )எழுதிய கட்டுரைக்கு எதிர் விணையாக எழுதியது)