தினமலருக்கு புத்தி புகட்டுவோம்

மதவெறி வளர்த்து - மனித நேயம் சிதைப்பதையே வயிற்றுப் பிழைப்பாக கொண்ட 'தினமலர்' தமிழக இஸ்லாமியர்களின் உணர்ச்சி மிக்க எதிர்ப்பையும்- எழுச்சி மிக்க போராட்டத்தையும் கண்ட பிறகும் தன்னுடைய தவறை உணர்ந்து இதுவரை மனமார மன்னிப்பு கோரவில்லை ஆனால், முஸ்லிம்களின் ஆத்திரத்தை குறைக்க என்ன வழியென்று மட்டும் 'சாணக்யத்தனமாக' யோசித்து, சடங்குக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

'தினமலர்' மனமார மன்னிப்பு கேட்டு விட்டதாக - திட்டமிட்டு ஒரு வதந்தியை இஸ்லாமிய மின்னஞ்சல் குழுமங்களில், வலைப்பூக்களில் மற்றும் இணையதளங்களில் உலாவ விட்டு - முட்டாளாக்கி, முஸ்லிம்களின் எதிர்ப்பை ‘மழுங்கடிக்க' முயற்சி செய்து வருகிறது। தினமலரின் இந்த நாடகத்தை - உண்மையென் நம்பி, சாத்வீகமான முறையில் முஸ்லிம்கள் தற்போது தெரிவித்து வரும் எதிர்ப்பை நிறுத்திவிடக்கூடாது।

மதவெறி தூண்டும் தினமலரின் - வக்கிரபுத்தியை உலக நாடுகளுக்கு எடுத்தியம்பி, அந் நாடுகளின் சட்டம் அனுமதித்திருக்கும் வழியில் 'தினமலர்' இணையதளத்தை தடைசெய்ய அதன் இறக்குமதியை தடை செய்ய தற்போது முஸ்லிம் சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக் கூடாது.

தமிழக முஸ்லிம்களை ‘கிள்ளுக்கீரையாக' நிணைத்துக் கொண்டிருக்கும் - தினமலருக்கு, நாம் உலகெங்கும் பரந்து-படர்ந்து விழுது விட்டு ஓங்கி நிற்கும் ஆலமரம் என்று நிரூபிக்க வேண்டும்।

நமது சகோதரர்கள எடுக்கும் நடவடிக்கைகள் 'தினமலரு'க்கு புத்தி வரும் வரை அல்லது பொருளாதர நஷ்டம் வரும் வரை தொடரவேண்டும்। அதற்காக நாம் கீழ்கண்ட ஐந்து விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். ...


1. நமது நடவடிக்கைகளின் மூலம் 'தினமலருக்கு' உண்மையில் புத்தி வந்ததா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2. எதிர்பார்த்த மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்றும்
3. மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கான
4. வழிமுறைகளை ஒருங்கிணைத்து - அந்த வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை (Action Plan or Plan of Actions) உருவாக்க வேண்டும்
5। அந்த திட்டத்தை - நிறைவேற்ற ஆர்வமுள்ள சகோதரர்களை உள்ள்டக்கிய சிறு சிறு குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.


இயக்க விலங்கை உடைத்து - குழு மணப்பான்மையை தகர்த்து அனைவரும் இஸ்லாமியர்களாக ஒன்றிணைந்தால் மதவெறி வளர்க்கும் ‘வந்தேறிகளை' வந்த வழியே திருப்பி அனுப்பிவிடலாம்..இன்ஷா அல்லாஹ்

3 பின்னூட்டங்கள்:

╬அதி. அழகு╬ said...

கடைசி வரிகளில் எல்லாம் அடங்கி விட்டது.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் பிறைநதி!

Anonymous said...

நல்ல பதிவு..

பிறைநதிபுரத்தான் said...

ஊதுற சங்க ஊதி வைப்போம்..இல்லை இல்லை அடிக்கிற நகராவ அடிச்சு வைப்போம். ’நகரா’ சத்தத்த கேட்டு தொழுகைக்கு வராட்டியும் - தொழுகைக்கான நேரம்னு வந்திருச்சின்னாவது மனசுல் தோனும்ல..

அடுத்து, என் சொ(இ)ந்த வலைப்பூவில் நான் இட்ட முதல் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான்..